உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரியகுளம்:பெரியகுளம் மலைமேல் கைலாசநாதர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னி ட்டு கலசாபிஷேக பூஜை நடந்தது.

கைலாசபட்டி மலைமேல் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோயில் உள்ளது. தென்மாவ ட்டங்களின் திருவண்ணாமலை என அழைக்கப்படுகிறது. கோயிலில் நேற்று 11ம் தேதி 7 ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது.

கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகம், ஆராதனை நடந்தது. கலசத்திற்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித் தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அன்பர்பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !