உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வெற்றி

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வெற்றி

இந்த மாதம் சுக்கிரன் ஜூலை 23க்கு பிறகும், புதன் ஆக.2க்கு பிறகும் நற்பலன் கொடுப்பர். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் வெற்றியும், நன்மையும் தருவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற  நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும்.

புதனால் ஆக.1 வரை குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனைவி வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். அதன் பின்னர் முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.  கையில் பெரும்பணம் புழங்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

குடும்பத்தில் சுக்கிரன் ஜூலை 24 முதல் சாதகமாக இருப்பதால் ஆடம்பர வசதிகள் பெருகும். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்துடன் விருந்து, விழாவில் அடிக்கடி பங்கேற்பீர்கள். ஆக.11,12,13ல் பெண்களால் நன்மை கிடைக்கும். ஜூலை 22,23,24ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று விலகி இருக்கவும். அதே நேரம் ஆக.7,8ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வேலையில் பொறுமையும்,  நிதானமும் தேவைப்படும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வெளியூரில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம். விடாமுயற்சி எடுத்தால் மட்டுமே கோரிக்கைகள் நிறைவேறும். ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். ஆக.2க்கு பிறகு வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். ஆக.5,6ல் அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். சனி, ராகுவால் அலைச்சல் அதிகரிக்கும் சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். இருப்பினும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளதால் தொழில் வளர்ச்சியைக் கொடுப்பார். ஜூலை 27,28ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஜூலை 23க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள்  தவறை உணர்ந்து தங்களுக்கு உதவிகரமாக செயல்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை அடைய முடியாது. ஆனாலும் கட்சிப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொண்டர்கள் வகையில் செலவு வரலாம்.  

மாணவர்கள் படிப்பில் மெத்தனமாக இருக்க வேண்டாம். ஆக.2க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பரிசு, பாராட்டு பெற்று மகிழ்வர்.

விவசாயிகள் சீரான மகசூலை பெறுவர். ஆக2 க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும். நெல், பாசிப்பயறு, சோளம் போன்ற பயிர்களில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரங்களில் முடிவு சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலர் பதவி உயர்வு காண்பர்.

* நல்ல நாள்: ஜூலை 20,21,27,28,29,30 ஆக.5,6,7,8, 11,12,13,16,17  
* கவன நாள்: ஜூலை 31, ஆக.1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5,6
* நிறம்: வெள்ளை, பச்சை

* பரிகாரம்:
●  தினமும் சூரிய நமஸ்காரம்
●  வெள்ளிக்கிழமையில் பசுவுக்கு கீரை, பழம்
●  சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !