வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில் 19ம் தேதி செடல் உற்சவம்
ADDED :2322 days ago
புதுச்சத்திரம்: வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில், வரும் 19 ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.கடந்த 14ம் தேதி கொடியேற்றம் நடந்தது. மறுநாள் முதல் 18 ம் தேதி வரை, தினமும் இரவு காத்தவராயன் கதை மற்றும் அம்மன் வீதியுலா நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் வரும் 19 ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 10:00 மணிக்கு
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு காத்தவராயன் கழுமரம் ஏறுதல், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது.