உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை எஸ்.பாறைப்பட்டியில் விநாயகர் கோயில், கும்பாபிஷேகம்

வடமதுரை எஸ்.பாறைப்பட்டியில் விநாயகர் கோயில், கும்பாபிஷேகம்

வடமதுரை : வடமதுரை எஸ்.பாறைப்பட்டியில் ஸ்ரீவிநாயகர், காளியம்மன், மாரியம்மன், முனியாண்டி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 2 நாட்களுக்கு முன் மாலை தீர்த்தம், முளைப் பாரி அழைப்பு, கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் (ஜூலை., 15ல்), காலை இரண்டாம் கால யாக பூஜைகள் முடிந்ததும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சிவகங்கை மாவட்டம் ஓ.புதுார் ராமமூர்த்தி சிவாச்சாரியர் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !