திருவாடானை அருகே வீரசக்தி அம்மன்கோயில் விழா
ADDED :2303 days ago
திருவாடானை: திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில் வீரசக்தி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மங்களக்குடி,பெருவாக்கோட்டை, ஆண்டாவூரணி உட்பட பல கிராமங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.