தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பெற்றோருக்கு பாத பூஜை!
ADDED :5027 days ago
காரைக்கால்: காரைக்காலில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்களை, பாத பூஜை செய்து வழிபட்டனர்.காரைக்கால் அம்மையார் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள், பெற்றோருக்கு பாத பூஜை செய்யும் விழா, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. நேற்று, 6ம் ஆண்டு பாத பூஜை விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு, தலைமையாசிரியர் அலமேலு வரவேற்றார்.விழாவில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்விற்கு செல்லும் 95 மாணவர்கள், தங்கள் பெற்றோர்களின் கால்களை கழுவி, பூஜை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.