கோதண்டராம சுவாமி கோயில்: பிரம்மோற்ஸவ விழா துவக்கம்!
ADDED :5027 days ago
ராஜபாளையம் :ராஜபாளையம் புதுப்பாளையம் கோதண்டராமசுவாமி கோயில் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள் அபிஷேகம் நடந்தது. மாலை, நெல்கதிர், புல் வைத்து அலங்கரிக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு சுவாமி மற்றும் கொடிமரத்திற்கு தீபாராதனை நடந்தது. மாரியம்மன் கோயில் தர்மகர்த்தா நாராயணன் ராஜா உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 நாள் நடக்கும் விழாவில் , பல் வேறு வாகனங்களில் தினம் சுவாமி வீதி உலா நடக்கிறது. மார்ச் 28ல் காலை 9.30 மணிக்கு திருக்கல்யாணம், ராமநவமியுடன் விழா முடிகிறது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஸ்ரீனிவாசராஜா, நிர்வாகிகள் சுரேஷ் ராஜா, வாசுதேவ ராஜா, ராமானுஜ தாசர், கோதண்ட ராஜா செய்திருந்தனர்.