காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்!
                              ADDED :4970 days ago 
                            
                          
                          
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் தேரோட்டம், நேற்று காலை, கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த 16ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் உற்சவமான, நேற்று, தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. காலை 8 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் ஆர்வமுடன் தேர் வடம் பிடித்தனர். கோவிலிலிருந்து புறப்பட்ட தேர் டி.கே.நம்பி தெரு, வரதராஜப் பெருமாள் கோவில் சன்னிதி தெரு சென்று, மீண்டும் அதே வழியாக, கோவிலை வந்தடைந்தது. இன்று பகல் 2 மணிக்கு தொட்டித் திருமஞ்சனம், மாலை குதிரை வாகனம், 24ம் தேதி காலை ஆல்மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, மாலை வேதசார விமானம், 25ம் தேதி காலை த்வாதசாராதனம், மாலை வெட்டிவேர் சப்பரம், த்வஜ அவரோஹணம், ஆகியவை நடைபெற உள்ளன.