சாணார்பட்டி அருகே புனித உத்திரிய மாதா விழா
ADDED :2318 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் புனித உத்திரிய மாதா ஆலய பாரம்பரிய ஆண்டு பெருவிழா நடந்தது. கடந்த ஜூலை 12 முதல் 19 வரை உபயதாரர்கள் சார்பில் நவநாள் பக்தி முயற்சி கடைபிடிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஜூலை., 20ல்) இரவு அன்னை மின் அலங்கார ரதத்தில் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் சென்றார். நேற்று (ஜூலை., 21ல்) பகலில் அன்னையின் சப்பர சுற்று பிரகாரம், ஊர்வலம் நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.