உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் சிற்பக்கலை அருங்காட்சியகம் மேம்படுமா?

மாமல்லபுரம் சிற்பக்கலை அருங்காட்சியகம் மேம்படுமா?

மாமல்லபுரம் : மாமல்லபுரம், அரசு சிற்பக்கல்லுாரி அருங்காட்சியகத்தை, சுற்றுலாவிற்கேற்ப மேம்படுத்த வேண்டும் என, ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக கலை, பண்பாட்டுத்துறையின் கீழ், அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரி, மாமல்லபுரத் தில் இயங்குகிறது. இவ்வூர் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில், தற்போது அமைந்துள்ள இக்கல்லுாரி, முன்பு, மாமல்லபுரம் நகர்ப்பகுதி, தொல்லியல்துறை அலுவலகம் அருகில் இயங்கியது.பழைய கல்லுாரி வளாகம், பாரம்பரிய கலை வடிவ கட்டடத்துடன் அமைந் துள்ளது.

கல்லுாரி மாணவர்களின் சிற்ப, ஓவிய படைப்புகளை, இங்கு காட்சிப்படுத்தி, கலை அருங் காட்சியகமாக, கல்லுாரி இயங்குகிறது.இந்த அருங்காட்சியகம் குறித்து, சுற்றுலா பயணியர் அறியாத நிலையே உள்ளது.இது ஒருபுறமிருக்க, இதன் ஊழியர் ஓய்வுபெற்ற நிலையில், வேறு ஊழியர் இன்றி, தற்போது மூடியே உள்ளது.கல்லுாரி நிர்வாகம், சுற்றுலாத்துறை நிர்வாகத்துடன் ஆலோசித்து, சுற்றுலாவிற்கேற்ற அருங்காட்சியகமாக மேம்படுத்த வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !