உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் - கடற்கரை பகுதிக்கு, நேரடி பாதை

மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் - கடற்கரை பகுதிக்கு, நேரடி பாதை

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், ஐந்து ரதங்கள் - கடற்கரை பகுதிக்கு, நேரடி பாதை அமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்துகின்றனர்.

மாமல்லபுரத்தில் உள்ள கலைச்சிற்பங்களை காண, ஏராளமான பயணியர் வருகின்றனர். கடற்கரைக்கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்டவை, வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த சிற்ப பகுதிகளுக்கு செல்லும் பாதை, குறுகியதாக இருக்கிறது.

கடற்கரைக்கோவிலில் இருந்து, ஐந்து ரதங்கள் பகுதிக்கு செல்ல, குறுகிய பாதையான பழைய சிற்பக்கல்லுாரி வழியே, செல்ல வேண்டும். அவ்வாறே, கடற்கரைக்கும் செல்லவேண்டும்.

வார இறுதி, அரசு விடுமுறை நாட்களில், சுற்றுலா வாகனங்கள் குவிந்து, ஒன்றரை கி.மீ., தொலைவை, கடும் நெரிசலில், ஊர்ந்தே கடக்கின்றன. சுற்றுலா போக்குவரத்து கருதி, கூடுதல் பாதை அவசியமாக உள்ளது.எனவே, ஐந்து ரதங்கள் - கடற்கரை இடையே, நேரடி பாதை அமைக்க வேண்டும். இது குறித்து, அரசு பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !