நிஜமான உறவினர்
ADDED :2319 days ago
துறைமுகத்தை விட்டு ஒரு கப்பல் கிளம்பத் தயாரானது. பயணிகளை நோக்கி வழியனுப்ப வந்த உறவினர்கள், கை அசைத்தனர். சிலர் பிரிவுத் துன்பம் தாளாமல் கண்ணீர் விட்டனர். தனியாக வந்த வியாபாரி ஒருவருக்கு உறவுகள் யாருமில்லை. கையசைத்து வழியனுப்பும் மற்றவர்களை ஏக்கமுடன் பார்த்தார். அங்கே நின்றிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து நூறு ரூபாய் கொடுத்து, ” இவர்களைப் போல என்னைப் பார்த்து கையசைத்து விடை கொடு?” என்றார். அவனும் போலிச் சிரிப்புடன் கையசைத்தான். உலகம் இதுபோன்ற போலி உறவுகளுக்குத் தான் மரியாதை செய்கிறது. உண்மையில் ஆண்டவர் மட்டுமே நமக்கு நிஜமான உறவினர். அவர் எப்போதும் நம்முடன் இருக்கிறார். பிறப்பில் இருந்து மரணத்திற்கு பிறகும் அவரது முன்னிலையில் நாம் இருக்கிறோம். ”நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்கிறார்.