ஆடி செவ்வாய்: அகத்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :2317 days ago
சென்னை: ஆடி முதல் வார செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள புற்றுக்கு பால் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிபாடு செய்தனர்.
ஆடி முதல் வார செவ்வாய்க்கிழமை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உற்சவ கோலத்தில் சுவாமி மற்றும் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெண்கள் புற்றுக்கு பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.