துர்கைக்கே மவுசு
ADDED :2319 days ago
கும்பகோணம் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் சிவத்தலமாகும். ஆனாலும் இங்கு துர்கை சன்னதியே பிரபலமாக இருக்கிறது. திருஞானசம்பந்தர் இங்கு வந்த போது, கடும் வெயில் அடித்தது. இதைக் காண சகிக்காத சிவபெருமான் தன் முத்துக்குடையை அனுப்பி வரவேற்றார். இங்குள்ள துர்கையை வழிபட்டால் பிரச்னை நீங்கி நிம்மதி நிலைக்கும்.