ஒரு தடவை = ஒரு லட்சம்
ADDED :2319 days ago
கடவுளின் திருநாமத்தை எழுதுவதற்கு ’லிகித நாம ஜபம்’ என்று பெயர். ’லிகிதம்’ என்றால் ’காகிதம்’. தினமும் காலை அல்லது மாலை வழிபாட்டின் போது ’ஓம் சிவாயநம, ஓம்நமசிவாய, ஓம் பராசக்திநம, ஓம் சரவணபவ, ஓம் முருகா, ஸ்ரீராமஜெயம்’ போன்ற திருநாமங்களை 108 முறை பலர் எழுதுவர். நினைத்தது நிறைவேற இஷ்ட தெய்வத்தின் திருநாமத்தை லட்சம் முறை எழுதுபவர்களும் உண்டு. இப்படி ஒரு நன்மை பெற எழுதுவதை விட, கடவுளை தியானித்து மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால் கூட லட்சம் நன்மைகள் கிடைக்கும். நமக்குத் தேவை மனத்தூய்மை மட்டுமே.