கீதை காட்டும் பாதை
ADDED :2319 days ago
தேவத் விஜகுரு பராஜ்ஞ
பூஜநம் ஸௌசமார்ஜவம்!
ப்ரஹ்மசர்ய மஹிம்ஸா ச
ஸாரீரம் தப உச்யதே!
அநுத் வேககரம் வாக்யம்
ஸத்யம் ப்ரியஹிதம் ச யத்!
ஸ்வாத் யாயாப் யஸநம் சைவ
வாங்மயம் தப உச்யதே!!
மந: ப்ரஸாத ஸௌம்யத்வம்
மெளநமாத்மவி நிக்ரஹ:!
பாவ ஸம்ஸுத்தி ரித்யேதத்
தபோ மாநஸ முச்யதே!!
பொருள்: உடலால் செய்யும் தவம் என்பது கடவுள், அந்தணர், பெரியோர்கள், ஞானிகளை வணங்குவதும், துாய்மை, நேர்மை, பிரம்மச்சரியம், அகிம்சை ஆகிய நற்பண்புகளுடன் வாழ்வதாகும். பேச்சில் இனிமை, உண்மை, நன்மை கலந்திருக்க வேண்டும். வாக்கினால் செய்யும் தவமானது வேதங்களை ஓதுவதும், கடவுளின் மந்திரங்களை ஜபிப்பதாகும். மனதால் செய்யும் தவமானது மகிழ்ச்சி, அமைதி, கடவுளை தியானித்தல், அடக்கம், தூய்மையாகும்.