நடப்பதெல்லாம் நன்மைக்கே!
சொல்கிறார் சாரதாதேவியார் இன்று -நினைவு தினம்
* நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால் நடப்பதெல்லாம் நன்மையே.
* நீ ஒரு பொருளை மதித்தால் மட்டுமே, அந்த பொருளும் உன்னை மதிக்கும்.
* உலகில் எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல. ஆசையுடன் பணியில் ஈடுபடு.
* மனதில் அமைதி நிலைக்க, பிறரிடமுள்ள நிறைகளை மட்டும் பார்.
* எதிர்பார்ப்பு இல்லாத அன்புடன், எல்லா உயிர்களையும் அரவணைத்துக் கொள்.
* பிரச்னை அனைத்திற்கும் மூலகாரணம் பணம். அதுதான் பாவம் செய்யத் தூண்டுகிறது.
* அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்ளாதே. நல்ல விஷயங்களில் மட்டும் ஈடுபடு.
* நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் எல்லா நன்மைகளும் வந்தடையும்.
* உன்னால் பிறருக்கு மகிழ்ச்சியளிக்க முடியுமானால், அதுதான், வாழ்வின் பயன்.
* கடவுளை நேசிப்பவனுக்கு, துன்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
* உடல் மட்டுமல்ல மனமும் சோம்பலால் கெடுகிறது. சுறுசுறுப்புடன் கடமையை செய்.
* இரக்கம் இல்லாத மனிதன், தன்னை கொடிய விலங்கு நிலைக்கு மாறுகிறான்.
* தவறை எண்ணி வருந்தாதே. அதை திருத்திக் கொள்வதே நல்ல பண்பு.
* பிறர் மனதைப் புண்படுத்துவது நல்லதல்ல. சுடுசொற்களைப் பேசுவது பெரும் பாவம்.
* தியானம், தவம் செய்வதால் மட்டுமே ஒருவன் கடவுளின் அருள் பெற முடியாது.