உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்

காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.55 லட்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவில் உண்டியலில், 55 லட்சத்து, 5 ஆயிரத்து, 209 ரூபாய் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்துள்ளது.காஞ்சிபுரம், காமாட்சியம்மன் கோவிலில், பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. அதன்படி, கோவிலில் உள்ள மூன்று உண்டியல் மட்டும், திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில், 55 லட்சத்து, 5 ஆயிரத்து, 209 ரூபாயும், 215 கிராம் தங்கமும், 452 கிராம் வெள்ளியும் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !