உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி குமரகோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை

காஞ்சி குமரகோட்டத்தில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மேற்கு ராஜ வீதியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழா, இன்று (ஜூலை., 25ல்) விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகையையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.பகல், 1:00 மணிக்கு, பக்தர்கள் எடுத்து வரும் காவடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறுது.பகல், 2:30 மணிக்கு, ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேகமும், இரவு, 10:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையருடன் சுப்பிரமணிய பெரு மாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு மருத்துவக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !