திருக்கழுக்குன்றத்தில் ஆடிப்பூர விழா துவக்கம்
ADDED :2323 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில், ஆடிப்பூர விழா, நேற்று (ஜூலை 25ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கழுக்குன்றத்தில், திரிபுர சுந்தரி அம்மன் சமேத வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவை அடுத்து, ஆடி மாதத்தில், ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு ஆடிப்பூர விழா, நேற்று (ஜூலை 25ல்), கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், தினசரி, திரிபுர சுந்தரி அம்மன் தொட்டி, அலங்கார விமானம், அதிகார நந்தி, சந்திர பிரபை, ரிஷப வாகனம், யானை உள்ளிட்ட வாகனங்களில், வீதியுலா வருகிறார். தேர்த் திருவிழா, 31ம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ஆக., 4ல், அம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது.