திருத்தணி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி பரணி விழா
ADDED :2323 days ago
திருத்தணி: திருத்தணி அடுத்த, கனகம்மாசத்திரம், பஜாரில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று (ஜூலை., 25ல்), ஆடிப்பரணியையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து, மாலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடலில் அலகு குத்தி, ’பொக்லைன்’ இயந்திரம் மூலம் பறந்து வந்து, உற்சவர் அம்மனுக்கு மலர் மாலை அணிவித் தனர். அதை தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக, பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபட்டனர்.