உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு

செஞ்சி முத்துமாரியம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவு

செஞ்சி:நாகம்பூண்டி முத்துமாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா நடந்தது.

நாகம்பூண்டி கிராமத்தில் புதிதாக சக்தி விநாயகர், பாலமுருகன், முத்து மாரியம்மன் கோவில் களில் கடந்த மாதம் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 48 நாள் மண்டலாபி ஷேகம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று (ஜூலை., 25ல்) நடந்தது. அதனையொட்டி, காலை 6:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. 10:00 மணிக்கு விசேஷ திரவிய ஹோமமும், 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதியும் நடந்தது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !