உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மழை, உலக நன்மை வேண்டி ஆடி முழுவதும் குங்கும அர்ச்சனை

சேலத்தில் மழை, உலக நன்மை வேண்டி ஆடி முழுவதும் குங்கும அர்ச்சனை

வீரபாண்டி: நல்ல மழை பொழியவும், உலக நன்மை வேண்டியும், சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், ஆடி மாதம் முழுவதும், பெரியநாயகி அம்மனுக்கு, விதவித அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் பெரியநாயகி அம்மன் முன், திருவிள க்கு ஏற்றி, ’லலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்து, குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆக., 4ல், ஆடிப்பூர திருவிழாவையொட்டி, பெரியநாயகி அம்மனுக்கு, சிறப்பு வளைகாப்பு அலங்காரம் செய்யப்படும். அதில், அம்மனுக்கு அணிவித்த வளையல்கள், சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படும். குங்கும அர்ச்சனை, வளையல் காப்பு உற்சவங்களில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற, கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !