பழநி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
கோத்தகிரி: குன்னூர் தேனலை சுற்றுவட்டார கிராம இளைஞர்கள், பழநிக்கு பாத யாத்திரை சென்றனர். பழநி பால தண்டாயுதபாணி கோவிலுக்கு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பழநிக்கு செல்லும் பக்தர்கள், முருகப் பெருமானுக்கு நடைபெறும் தங்கத்தேர் இழுக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, ஐயனை பயப்படுகின்றனர். நடப்பாண்டு, குன்னூர் தேனலை ஸ்ரீ விநாயகர் பஜனை சபா குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பாதயாத்திரையில், தேனலை, ஒடையரட்டி, சக்கலட்டி மற்றும் எதுமகன்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர். காலை, 9:00 மணிக்கு, தேனலை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட பக்தர்கள், குன்னூர் வழியாக, மேட்டுப்பாளையம் குமரன்குன்று ஐய்யன் கோவிலில் தங்குகின்றனர். நாளை காலை, 9:00 மணிக்கு புறப்படும் பக்தர்கள், பல்லடம், தாராபுரம் வழியாக வரும் வெள்ளிக்கிழமை பழநி முருகன் கோவிலை அடைந்து, அன்று இரவு நடைபெறும் தங்கத்தேர் விழாவில் பங்கேற்று ஐயனை வழிபடுகின்றனர்.