திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
ADDED :2265 days ago
ரிஷிவந்தியம்: தொழுவந்தாங்கலில் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த தொழுவந்தாங்கலில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா கடந்த 19ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி, ஊரணி பொங்கலுடன் துவங்கியது.தொடர்ந்து 3 நாட்கள் இரவு சுவாமி வீதியுலாவும், 25ம் தேதி அம்மன் - அர்ச்சுனன் சுவாமியின் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் தீ மிதி உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.