உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சப்த கன்னியர் கோவில் சேதம் குறித்து விசாரணை

புதுச்சேரி சப்த கன்னியர் கோவில் சேதம் குறித்து விசாரணை

புதுச்சேரி : கோவிந்தசாலையில், சப்த கன்னியர் கோவிலை சேதப்படுத்திய மர்ம  நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கோவிந்தசாலை சின்னபொய்கை குவார்ட்டர்ஸ் பகுதியில்  சாலையோரமாக சப்த கன்னியர், ஓம்சக்தி கோவில் உள்ளது. இங்கு, சிறிய  விநாயகர் சிலை, சப்த கன்னியர், ஓம்சக்தி சுவாமி படங்கள் வைத்து, அப்பகுதி  மக்கள்வழிபாடு செய்து வருகின்றனர்.நேற்று 29 ல்,மாலை அப்பகுதியில் நடந்த இறுதி  ஊர்வலத்தின்போது, மர்ம நபர்கள் சிலர், இந்த கோவிலில் இருந்த அம்மன் படம்,  சப்த கன்னியர் பேனர்கள், சூலாயுதம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி யதாக  கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவலறிந்த பெரியக்கடை போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி, அங்கு சேதப்படுத்தப்பட்ட  நிலையில் கிடந்த சுவாமி பட பேனர்களை எடுத்துச் சென்றனர்.கோவில் நிர்வாகி  ஓம்சக்தி ரமேஷ் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை போலீசார், அப்பகுதியில்  உள்ள சி.சி.டி..வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கோவிலை சேதப்படுத்திய  மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !