விக்கிரவாண்டி தும்பூர் நாகம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் நாகம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் தாங்கல் கிராமத்தில் உள்ள சுயம்பு நாகம்மன் கோயிலில் ஆடிப் பூரத்தை முன்னிட்டு நேற்று (ஆக., 4ல்) காலை அம்மனுக்கு பால், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி மலர்களாலும், எலுமிச்சை பழம், வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு மகா தீபஆராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை அபிராம சர்மா தலைமையில் கிரிதரன் சர்மா, கோபால் சர்மா ஆகியோர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் ராமலிங்கம், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னின்று செய்திருந்தனர்.