உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் கோலாகலம்!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் கோலாகலம்!

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். நாரத மாமுனிவர் தவமிருந்து அம்பாளை வழிபட்ட இத்திருஸ்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா ஏப்ரல் முதல் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பாகிறது. 10ம் தேதி முடிய விழா தொடர்ந்து நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பூச்சொரிதல் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்லக்குகளில் பூ தட்டுகள் எடுத்துச் சென்றனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !