பழநி முருகன் கோயிலில் ‛ரோப்கார் நிறுத்தம் வின்ச்-சில் காத்திருப்பு
ADDED :2299 days ago
பழநி:ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள், ரோப்கார் நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் 3:00 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
பழநி மலைக்கோயிலுக்கு ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் பக்தர்கள் அதிகாலை முதல் குவிந்தனர். மலைக்கு 3 நிமிடத்தில் செல்லும் ரோப்கார் ஆண்டுபராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. வின்ச் ஸ்டேஷனில் குவிந்த பக்தர்கள் 3 மணிநேரத்திற்கு மேலாக காத் திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் 2:00 மணி நேரம் வரை காத்திருந்து தரி சனம் செய்தனர். இதேப்போல தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.