பெரியபட்டினம் தர்காவில் ஆக. 8 ல் கொடியேற்றம்
பெரியபட்டினம்:பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் பெரியபட்டினம்தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், யாத்ரீகர்கள்வந்து செல்கின்றனர்.
118ம் ஆண்டிற்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம், வருகிற ஆக., 8 (வியாழன்) மாலை 5 மணியளவில் நடக்க உள்ளது. மாலை முதல் இரவு நேரங்களில் மவுலீது எனும் புகழ்மாலை தொடர்ச்சியாக ஓதப்படும். ஆக., 18 (ஞாயிறு) மாலை முதல் கலை நிகழ்ச்சிகளும் மறுநாள் (திங்கள்) அதிகாலை 4 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக்கும். ஆக. 29 (வியாழன்) அன்று மாலை கொடியிறக்கம் செய்யப்படும். ஏற்பாடுகளை பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் மற்றும் சுல்த்தானியா சங்கம், முத்தரையர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.