உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 214 வது உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 214 வது உழவாரப்பணி

காஞ்சிபுரம், தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற 11.8.2019, ஞாயிற்றுக்கிழமை, காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயிலில் சர்வ தீர்த்தக்குளம் உட்பட குளங்கள் மற்றும் கோயில் வளாகங்கள் உழவாரப்பணி. இதை தொடர்ந்து இந்த இறைபணிமன்றம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேற்கு ராஜகோபுரம் ராஜ வீதியில், அத்தி வரதர் தரிசனம் செய்து வரும் பக்தர்களிடையே கோயில்களின் துாய்மை-நலன்-பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல்

விழிப்புணர்வின் அவசியங்கள்

* திருக்கோயில்தோறும் தூய்மையாக வைத்திருத்தல் (உழவாரப்பணி)
* திருக்கோயில்களை நமது இல்லமாக பாவித்து தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும்.
* திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், திருக்கோயில் வளர்ச்சி, வருமானம் மூலமாக, பின்வரும் தேவைகளுக்கு வழி செய்தல்.
* திருக்குளம் பராமரிப்பு - திருக்குளத்தை சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், நீர்வள ஆதாரத்தை பெருக்குதல்
* திருக்கோயில்களில் சிலை திருட்டை தடுப்பதற்கான வழியை உருவாக்குதல்.
* திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதியுலா செல்ல ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் சுவாமி திருத்தேர் செய்து பவனி வர ஏற்பாடு செய்தல்.
* திருக்கோயில்களில் கோசாலை பாதுகாத்து தொடர்ந்து பராமரித்தல்.
* திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்காக குடிநீர், தங்குமிடம், அன்னதான கூடம், கழிப்பறை வசதி செய்ய ஏற்பாடு
* திருக்கோயில்தோறும் அப்பகுதிவாழ் சிறார்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு,
* திருக்கோயில்தோறும் ஆகம விதி பின்பற்றுதல், புராதானம் மாறாமல் காப்பது.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் திருக்கோயில் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வலியுணர்த்தும் வகையில் அவர்களாகவே முன்வந்து திருக்கோயில் நிர்வாகத்துடன் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவதே மன்ற அடியார்களின் தலையாய கடமையாகும். விழிப்புணர்வு மூலம் உழவாரப் பணி செய்யும் திருக்கோயில்கள்தோறும் குறைந்தது 50 அடியார் பெருமக்களையாவது அத்திருக்கோயிலில் நிரந்தரமாக தொண்டு செய்வதற்கு உருவாக்குவதே.

தொடர்புக்கு:
 எஸ். கணேசன்  9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !