உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகங்கை சுப்பிரமணிய சுவாமிகோவில் பங்குனி கொடியேற்றம்

சிவகங்கை சுப்பிரமணிய சுவாமிகோவில் பங்குனி கொடியேற்றம்

சிவகங்கை :சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது. சிவன்கோவில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் பங்குனி உத்திர பிரமோத்சவ விழா துவங்கியது. காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சன்னதி முன் உள்ள கொடிகம்பத்தில், கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் மயில், ரிஷபம், அன்னம், யானை, குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 9ம் நாளான ஏப்.,4 அன்று காலை 8 முதல் 9 மணிக்குள், புஷ்ப பல்லக்கு நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி, தேரோட்டம் நான்கு ரதவீதிகளில் நடக்கும். பத்தாம் நாளான ஏப்.,5 அன்று காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.

*தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோயில் பங்குனி விழா நடந்தது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்தும்,அலகு குத்தியும் , பறவை காவடியாக வந்து பூக்குழி இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !