திருச்சுழி கோயில் விழா துவக்கம்
ADDED :4939 days ago
திருச்சுழி :திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயில் பங்கு விழா மார்ச் 26 ல் துவங்கியது. கொடியேற்றம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வருதல், ஏப். 3ல் திருக்கல்யாணம், ஏப். 4ல் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 5 ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் நகர்வலம் வர விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் கே.கணேசன், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாக அலுவலர் வி.மகேந்திரன் செய்திருந்தனர்.