உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் பக்ரீத் தொழுகை

திண்டுக்கல்லில் பக்ரீத் தொழுகை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பக்ரீத் திருநாளை முன்னிட்டு  சிறப்பு தொழுகைகள் நடந்தது.திண்டுக்கல்லில் மதுரை ரோடு பெரிய  பள்ளிவாசல், முகமதியாபுரம், சந்துக்கடை, நாகல்நகர் பள்ளி வாசலில் பக்ரீத்  திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவி த்து, ஏழை எளியோருக்கு குர்பானி வழங்கினர். பழநி: பக்ரீத்தை முன்னிட்டு, பழநி, திருநகர், சின்ன பள்ளிவாசல், பெரியபள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.

இதே போல் லட்சுமிபுரம், பாண்டியன்நகர், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி,  பெரியகலையம் புத்துார் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு  தொழுகையில் ஏராளமானோர் பங்கேற் றனர். நத்தம்: பக்ரீத் பண்டிகையை  முன்னிட்டு நத்தம் பெரிய பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் முன்னிலையில் தக்பீர்  ஒதும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து மேலத்தெரு மற்றும் தெற்குத்தெரு பள்ளிவாசல் ஜமாத்தார்களும் இனணந்து மதுரை ரோடு, கோவில்பட்டி வழியாக கரிமேடு ஈத்கா மைதானம் சென்றடைந்தனர்.

ஹஜ்ரத் முகமது சித்திக் ’திருக்குர் ஆன்’- ல் முஸ்லிம்கள் குர்பானி கொடுக்க பிறப்பித்த கட்டளை குறித்து விளக்கினார். ஹஜ்ரத் இக்பால் இமாமா முன்னின்று சிறப்பு தொழுகை நடத்தினார். உலக நன்மை வேண்டி முஸ்தபா ஹஜ்ரத் சேக்சிக்கந்தர் குத்பா ஓதினார். இதன் பின் மீண்டும் பள்ளிவாசல்களுக்கு சென்று ’து ஆ’ ஓதினார்.  

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குர்பானி வழங்கினர். கோசுகுறிச்சி,  வேம்பார்பட்டி, சாணார்பட்டி, கணவாய்பட்டி, மருநூத்து, பாறைப்பட்டி, ராஜக்காபட்டி  உள்ளிட்ட பகுதி களிலும் சிறப்பு தொழுகை நடந்தது.கன்னிவாடி: கன்னிவாடி,  சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், பக்ரீத்தை முன்னிட்டு  பள்ளிவாசல்களில், சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. ஒருவருக்கொருவர்  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !