உடனடி பலன் பெறும் சூட்சுமம்
ADDED :2350 days ago
சரணாகதி அடைய விரும்புபவர்கள் உடனடி பலன் பெறும் சூட்சுமத்தை ராமாயணத்தின் அயோத்தியா காண்டம் காட்டுகிறது. ராமர் காட்டுக்கு கிளம்பிய போது லட்சுமணன் உடன் வருவதாக தெரிவித்தான். ஆனால் ராமர் சம்மதிக்கவில்லை. லட்சுமியின் அம்சமான சீதையும் காட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்தாள். இது தான் சமயம் என்று கருதி லட்சுமணனும், ”அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன்” என்று சொல்ல ராமர் சம்மதித்தார். தஞ்சம் என வந்தவர்களை தாயாரின் மனம் ஏற்க மறுப்பதில்லை. இதனடிப்படையில், கோயில்களில் பெருமாளை வணங்கும் முன் தாயாரை வணங்க வேண்டும் என்னும் வழக்கம் ஏற்பட்டது.