இரண்டு விரல் காட்டும் பெருமாள்!
ADDED :2268 days ago
வெற்றியை வெளிப்படுத்த இரு விரல்களை அரசியல்வாதிகள் காட்டுவர். இதற்கு முன்னோடியாக இருப்பவர் உலகளந்த பெருமாள். வாமன அவதாரத்தில் தன் திருவடியால் உலகை அளந்த போது, ”மகாபலி! எனக்கு இரண்டடி நிலம் கொடுத்து விட்டாய். மூன்றாவது அடி எங்கே?” எனக் கேட்டார். இக்கோலத்தில் காட்சி தரும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள், இடது கையில் இரு விரல்களை காட்டியபடியும், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலுாரில் உள்ள உலகளந்த பெருமாள் ஒரு விரலைக் காட்டியபடியும் உள்ளார்.