பொறுப்பாளர் யார்?
ADDED :2328 days ago
மனிதர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவர். மக்களின் தலைவர் நாட்டின் பொறுப்பாளர். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் தன் குடும்பத்தின் பொறுப்பாளர். அவர் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவார். பணியாளர் தனது எஜமானனின் செல்வத்திற்கு பொறுப்பாளர். அவரும் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவார். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே.