எல்லாம் அவன் விருப்பம்
ADDED :2265 days ago
”என் மகளுக்கு நிக்காஹ் செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்த மாதம் உங்களைச் சந்திப்பேன். பணஉதவி செய்ய முடியுமா?” என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் ’இன்ஷா அல்லாஹ்’ என்று பதில் சொல்லுங்கள். இந்தச் சொல்லுக்கு ’அல்லாஹ் விரும்பினால்’ என்று அர்த்தம்.
ஆம்...இறைவனின் விருப்பமில்லாமல் எதுவும் நடக்காது. உதவி கேட்பவரும், உதவி செய்பவரும் அதுவரையில் உயிருடன் இருக்க வேண்டும். அப்படியே இருந்தாலும் உதவி செய்ய விரும்புபவர் வாழ்வில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியும். எது நடந்தாலும் இறைவனின் விருப்பப்படியே நடக்கிறது. எனவே ’இறைவனின் விருப்பப்படி ஆகட்டும்’ என்று சொல்லுங்கள். விருப்பம் நிறைவேற இறைவனை வேண்டுங்கள்.