உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: சம்பா சாதம்

பிரசாதம் இது பிரமாதம்: சம்பா சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி     – 2 கப்
மிளகு, சீரகம்     – தலா 2 டேபிள் ஸ்பூன்  
நெய்     – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு     – தேவையான அளவு

செய்முறை: பச்சரிசியை 4 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வேக வைக்கவும்.  மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாகப் பொடித்து, சோற்றுடன் சேர்க்கவும். பிறகு, நெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்தால் சம்பா சாதம் தயார்.

கத்தரிக்காய் கொத்சு: தேவையான பொருட்கள்

கத்தரிக்காய்         – கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கவும்),
மஞ்சள்தூள்         – ஒரு சிட்டிகை
புளி         – பெரிய நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய்     – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு         – ஒரு டீஸ்பூன்
உப்பு         – தேவையான அளவு
எண்ணெய்         – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     – 5
கடலைப்பருப்பு     – 2 டேபிள் ஸ்பூன்
தனியா         – 4 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள்     – அரை டீஸ்பூன்

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து மிக்சியில் பொடியாக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். காய் வெந்ததும் பொடித்து வைத்தவற்றை தூவி மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்கு சம்பா சாதம், கத்தரிக்காய் கொத்சும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !