கண்டாச்சிபுரம் தமிழ் தேவார வழிபாட்டு சபை 60ம் ஆண்டு நிறைவு விழா
ADDED :2244 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபை யின், 60ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.
அதனையொட்டி ராமநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சண்முக சிவாச்சாரியார் தலைமையில் சிவவேள்வியும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் நடைபெற்ற சமய அரங்கம் நிகழ்ச்சிக்கு புலவர் கருணாகரன் தலைமை தாங்கினார். அம்பலவாணன், புலவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். கூட்டு வழிபாட்டின் மேன்மை என்ற தலைப்பில் சுப்ரமணிய பாரதியார் பேசினார்.ஏற்பாடுகளை தமிழ் வேதவார வழிபாட்டு சபையினர் செய்திருந்தனர்.