உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் அம்பிகைக்கு பவுர்ணமி பூஜை

கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் அம்பிகைக்கு பவுர்ணமி பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் 12 தமிழ் மாதங்களும் அம்பிகைக்கு சிறப்பு பவுர்ணமி யாக பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் நுாற்றாண்டு சிறப்பு பெற்ற சிவகாமி அம்மன் சமேத சிதம்பரேஸ்வரர் கோவி லில் சிவாலய சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அம்பாளுக்கு 12 தமிழ் மாதங்களிலும், பவுர்ணமி தோறும் சிறப்பு யாகம், பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

2019ம் ஆண்டு ஆடி மாதம் துவங்கிய பவுர்ணமி யாகம் 2020 ஆனி மாதம் வரை நடத்தப்படுகிறது. இதேபோன்று தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தப் பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !