உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை

உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை

உடுமலை : உடுமலை, வாளவாடி வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவிலில்,  கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணர் பிறந்த தினமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று,  பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள்  நடக்கிறது.பக்தர்கள், கிருஷ்ணரின் வருகைக்கு காத்திருக்கும் வகையில், பச்சரிசி  மாவில் பாத சுவடுகள் வரைந்து, சுவாமிக ளுக்கு விருப்பமுள்ள பண்டங்களாக,  முறுக்கு, வெண்ணை, பால், இனிப்பு உள்ளிட்ட உணவு களை படைத்தும் வழிபாடு  செய்கின்றனர்.உடுமலை அருகே வாளவாடி ஊராட்சியில், ருக்மணி சத்யபாமா  சமேத வேணுகோபாலகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று  கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ருக்மணி சத்யபாமா சமேதமாக புல்லாங்குழலுடன் காட்சியளிக்கும்  வேணுகோபால கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று 23ல் காலை, 6:00 மணிக்கு மகா சுதர்சன ஹோமமும், காலை, 11:00 மணிக்கு 16  திரவியங்களில் அபிஷேகமும் நடந்தன.

சுவாமிகளுக்கு வண்ண மயமாக பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகள் திருவீதி உலா நடந்தது. கிருஷ்ண ஜெயந்தி யையொட்டி, கோவில் வளாகத்தில் உறியடி உற்சவம், சாற்றுமறை, தீபாராதனை இடம் பெற்றது.

இதையடுத்து, சுவாமிகளுக்கு அமுது வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள்  கண்ணன் ராதையாக வேடமிட்டு, நடனமாடினர். பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும்  நடந்தன. சுற்றுப்பகுதி கிராம மக்கள் திரளாக பங்கேற்று கிருஷ்ணரை தரிசனம்  செய்தனர்.உடுமலை, நெல்லுக் கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவிலில்,  கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. விழாவை யொட்டி, நெல்லுக்கடை வீதி  பெருமாள் கோவிலில், சவுந்திரராஜ பெருமாளுக்கு மாலையில், சிறப்பு அபி ஷேகத்துடன் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். உறியடித்து மகிழ்ந்த குழந்தைகள்  உடுமலை வி.எச்.பி., சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. குழந்தைகளுக்கு  உறியடித்தல், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணன், ராதை வேடமணிந்து குழந்தைகள் பங்கேற்றனர். நிர்வாகிகள் கணேஷ்குமார், ரவிசங்கர், சதீஸ், பாலாஜி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !