கடலுார் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம்
கடலுார்: கடலுார் புதுப்பாளையம் ராஜகோபால் சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று 23ல், மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலுார் புதுப்பாளையத்தில் உள்ள பாமா ருக்குமணி சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று 23ல் மாலை 4:30 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
திருமஞ்சனத்தில் அதிகளவு பால்,தயிர்,தேன், பழவகைகள் சேர்க்கப்பட்டது. மாலை 6:30 மணி க்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மூலவர் ராஜகோபால பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, கிருஷ்ண மூர்த்தி பட்டாச்சாரியார் செய்திருத்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு, தினமலர் மற்றும் சூப்பர் ருசி பால் சார்பில் அழகிய பெருமாள் படம் மற்றும் லட்டு, சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.