உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் கிருஷ்ண ஜெயந்தி: நாமக்கல்லில் சிறப்பு பூஜை

நாமக்கல் கிருஷ்ண ஜெயந்தி: நாமக்கல்லில் சிறப்பு பூஜை

நாமக்கல்: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் பெருமாள்  கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று 23ல் கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. அனைத்து பெருமாள் கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு  பூஜை நடந்தது. வீடுகளில் குழந்தைகளின் பாதத்தை பதிய வைத்து, கிருஷ்ணர்  வேடமிட்டு கொண்டாடினர்.

சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி  கிருஷ்ண சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  செய்யப்பட்டது. உற்சவ மூர்த்தி மலர்களால் அலங்கரிக்கப் பட்டு, கோவில்  வளாகத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது.

* மோகனூர் அடுத்த வளையப்பட்டி பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோவிலில்,  பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும்  அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதம்  வழங்கப்பட்டது. அதேபோல், குமாரபாளையம், ப.வேலூர், திருச்செங்கோடு,  ராசிபுரம், மல்லசமுத்திரம் என, மாவட்டம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி  சிறப்பாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !