உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா

விழுப்புரம் கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதுார் வேணுகோபால் சுவாமி கோவிலில், கிருஷ்ண  ஜெயந்தி யை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று  23ல் காலை வேணு கோபால் சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.  

தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நகர்மன்ற  சேர்மன் ஜனகராஜ், உறியடி விழாவை துவக்கிவைத்தார்.இதில், கிருஷ்ணர் சிறப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் பங்கேற்று  உறியடித்தனர்.

கண்டாச்சிபுரம்சித்தாத்துார் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு  அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது. மாலை  உறியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலில், நேற்று காலை விஸ்வக் சேனர் வழிபாடு, கணபதி பூஜைகள் நடந்தது. மூலவர் மற்றும் உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கலச அபிஷேகத்திற்கு பின் மூலவர் நவநீத கிருஷ்ணனுக்கு தங்க கவசம் அணிவித்து, மகா தீபாரதனை நடந்தது.

இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து இன்று 24ம் தேதி காலை உறியடி உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10:30 மணிக்குமேல் ராதா, ருக்மணி, நவநீத கிருஷ்ணன் சுவாமிகளின் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !