திருத்தணி கிருஷ்ணர் உற்சவம் விமரிசை
ADDED :2277 days ago
திருத்தணி:கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி -- அரக்கோணம் சாலை சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை ஒட்டி, சிறப்பு பூஜைகள், நேற்று 23ல் நடந்தன. காலையில், உற்சவர்களான ராதை, கிருஷ்ண ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதேபோல், மேல்கசவராஜபேட்டையில் உள்ள, ருக்மணி -- சத்யபாமா சமேத சந்தான கோபால சுவாமி கோவிலிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, கிருஷ்ணரை தரிசித்தனர்.திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் நடந்த விழாவில், குழந்தைகள், கிருஷ்ணர் வேடம் அணிந்து, அங்கிருந்த கிருஷ்ணர் சிலையை வழிபட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்து நெல்லிக் குன்றம் சுப்ரமணிய சுவாமி மலைக்கோவில் மற்றும் நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி கோவில்களில், இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.