உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் சோதனை

பழநியில் பக்தர்கள் சோதனை

பழநி : கோவையில் பயங்கர வாதிகள் ஊடுருவல் எதிரொலியாக, பழநி முருகன்  கோயிலில் போலீஸ் சோதனைக்கு பின்பே பக்தர்கள் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் கோவையில்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பழநி முருகன் கோயில் வரும்  பக்தர்கள் அதிகளவில் குவியும், பாதவிநாயகர் கோயில், படிப்பாதை, வின்ச்  ஸ்டேஷன், தரிசன வழிகளில் கூடுத லாக போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது.  ஸ்கேனர் மூலம் உடைமைகளை சோதனை செய்கின்றனர்.

பழநி டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறுகையில், ”பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்  காரணமாக பொதுமக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட், அடிவாரம், மலைக்கோயில்,  வின்ச், படிப்பாதை பகுதிகளில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில்  உள்ளனர். நகரின் நுழைவுப்பகுதிகள் ஏழு இடங்களில் வாகன தணிக்கை  நடக்கிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !