உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் கஞ்சி கலய ஊர்வலம்

கடலுார் கஞ்சி கலய ஊர்வலம்

கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின், 38வது கஞ்சி கலய மற்றும்  முளைப்பாரி ஊர்வலம் நேற்றுமுன் தினம் 25ல், காலை நடந்தது.

மன்றத் தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மாலதி, வட்ட தலைவர் முத்துகுமரன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் மணி கஞ்சி கலய ஊர்வ லத்தை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் வன்னியர் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. மழை வேண்டி இந்த ஊர்வலம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !