உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கோத்தகிரி : கோத்தகிரி மூணுரோடு வலம்புரி விநாயகர், பண்ணாரி மாரியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவை ஒட்டி, விநாயகர் வழிபாடு, பஞ்ச கவ்யம், வாஸ்து சாந்தி, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு கோபுரம் கலசம் வைத்து தெய்வங் களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

ஊர் பொதுமக்கள் முன்னிலையில், காலை, 8:45 மணி முதல், 9:45 மணிவரை விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகமும், 10:00 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் தசதான தரிசனம் நடந்தது. தொடர்ந்து, தெய்வங்களுக்கு விஷேச அலங்கார பூஜை, மஹா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இடம் பெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !