குன்னுார் ஆதிபராசக்தி மன்றத்தினர் கஞ்சி கலய ஊர்வலம்
ADDED :2344 days ago
குன்னுார் : குன்னுார் ரேலி காம்பவுண்ட் பகுதியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின், 22ம் ஆண்டு கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது.
அம்மா பவானி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி முளைப்பாரியுடன் ஊர்வலம் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் வார வழிபாட்டு மன்றத்தை அடைந்தது. விவசாயம் செழிக்கவும், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கவும் சிறப்பு வழிபாடு கள் நடத்தப்பட்டன. அன்னதானத்தை, கன்டோன்மென்ட் வாரிய முன்னாள் துணைத்தலைவர் வினோத்குமார் துவக்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை மன்ற தலைவர் பிரபாவதி, துணைத் தலைவர் இந்துமதி செயலாளர் ஜெயலட்சுமி, இளைஞரணி தலைவர் செந்தில், முருகன் உட்பட பலர் செய்திருந்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.